Thursday, July 10, 2008

வவுனியா சிவன்கோவில் கும்பாபிசேஷகம்

சிவனடியார்களே கீழ் உள்ள இணைப்பில் கும்பாபிசேக புகைப்படங்களின் தொகுப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

வவுனியா சிவன்கோவில் கும்பாபிசேகத்�

வவுனியா சிவன் கோவில் கும்பாபிசேகம்

































அன்பர்களே எமது ஆலய சிவாலய மகா கும்பாபிசேக நிகழ்வின் நிழற்படங்கள் இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு தினங்களின் அனைத்து நிழற்படங்களும் தரம்பிரிக்கப்பட்டு அவை பிக்காசா இணைப்பில் சேர்க்கப்பட்டு அதன் முகவரியை வெளியிடுகின்றோம்.



மகா கும்பாபிசேகம் (09-07-2008) அன்று நடை பெற்ற நிகழ்வுகள்



















































10.45 மணி தொடக்கம் 11.58 வரையிலுள்ள சுபமுகூர்த்தத்தில் , ஸ்துபிகள் அபிசேகம், பிரதான கும்ப உத்தாபனம், வீதி பிரதசாசணம், புஸ்பாஞ்சலி, மஹா கும்பாபிசேகம்.

Tuesday, July 8, 2008

கும்பாபிஷேகம் பற்றிய விளக்கம்


கும்பாபிஷேகம் நான்கு வகைப்படும். அவையாவன ஆவர்த்தம், அனாவர்த்தம் புனராவர்த்தனம், அந்தரீதம் என்பன. இப்படியான கும்பாபிசேகத்திற்கு 1குண்டம், 5குண்டம், 9 குண்டம், 17குண்டம், 25குண்டம், 33குண்டங்களை அமைத்து யாகங்கள் போட்டு கும்பாபிசேகத்தை செய்வார்கள். இந்த வகைளயிலான கும்பாபிசேகம் இந்த ஆண்டு வவுனியா கோயில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் ஆலயத்தில் 33குண்டங்களோடு கூடிய உத்தமோத்தம பச மகாகும்பாபிசேகம் நடைபெற அகிலாண்டேசுரப் பெருமான் திருவருள் கூடியுள்ளது. 09-07-2008ம் திகதி புதன் கிழமை காலை 10.45மணிமதல் 11.56 வரையுள்ள கன்னி லக்கின சுப முகூர்த்த வேளையில் கும்பாபிசேகம் நடைபெற திருவருளும் குருவருளும் கூடியுள்ளது. இந்த உத்தமோத்தம மகாயாகம் ஆலய முன்றலில் கம்பீரமாக அமைந்துள்ளது. 4ஆவரணங்களோடு கூடியதும் 100ஸநபங்கள் அமைந்துள்ளதுமான முதலாவது ஆவரணத்தில் ஒன்பது குண்டங்களும், 2வது ஆவரணத்தில் 8 குண்டங்களும், 3வது ஆவரணத்தில் 8 குண்டங்களும், 4வது ஆவரணத்தில் 8குண்டங்களும் ஆக 33குண்டங்களும் அமைந்துள்ளது.


அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு 9 குண்டங்களோடு கூடிய யாகமும், மூத்த விநாயகருக்கு 9 குண்டங்களோடு கூடிய யாகமும், புதிதாக அமைக்கப்பட்ட துவாசுப்பிரமணியருக்கு 9 குண்டங்களோடு யாகமும், இதைவிட 9 யாகங்கள் ஒரு குண்டத்தோடு கூடிய யாகமும் ஆக 13 யாகங்கள் அமைக்கப்பட்டு கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற உள்ளது.


அகிலாண்டேஸ்சுரசுவாமிக்கு அமைந்த 33குண்டங்களோடு கூடிய உத்தமோத்தம பச மகாயாகத்தில் உள்ள 100 ஸ்தம்பங்களும் 100 ருத்திரர்களும் பூஜிக்கப்படுவார்கள் உள் ஆவரணத்தில் அமைந்துள்ள பிரதான குண்டத்தில் அக்கினி உண்டாக்கப்பட்டு ஏனைய 32குண்டங்களுக்கும் பங்கிடப்பட்டு ஆகுதிகள் செய்யப்படும் இந்த 32 குண்டங்களிலும் செய்யப்பட்ட ஆகுதிகள் கும்பாபிசேகத்தின் அன்று பிரதான குண்டத்தில் சேர்க்கப்பட்டு பூர்ணாகுதி கொடுக்கப்பட்டு பின்னர் இந்த சக்திகள் கும்பத்தி்ல் சேர்ந்து தீபாராதனை புஸ்பாஞ்சலி, வேதஸ்தோத்திர திருமுறைப்பாராயணம், நாதாஞ்சலி, கீதாஞ்சலி, நிர்த்தியாஞ்சலி ஆகியன சமர்ப்பிக்கப்பட்டு அலங்காரமாக கும்பம் வீதிவலமாக எடுத்துவரப்பட்டு உள்ளே லிங்கமாக அமைந்துள்ள அகிலாண்டேஸ்சுரப் பெருமானுக்கு கும்பாபிசேகம் நடைபெறும்
இந்த கும்பாபிசேகத்தின் பயனாக வவுனியாவிலும், இலங்கை நாட்டிலும் சாந்தி சமாதானம் ஏற்பட வேண்டும் என்று நாம் எல்லோரும் பிரார்திப்போமாக. ஆலய அறங்காவலர்கள், பங்குபற்றிய சிவாச்சாரியர்கள், பங்கு கொண்ட அடியார்கள், நிதியுதவி, பொருளுதவி, சரீர உதவி செய்த அன்பர்கள், வெளிநாடுகளி்ல் வசித்தும் அகிலாண்டேஸ்சுரப் பெருமானின் நினைவோடு பொருளுதவி புரிந்த அன்பு உள்ளங்கள் எல்லோருக்கும் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரப் பெருமான் திருவருளோடும், நோயற்ற உடலோடும் நீண்ட ஆயுளோடும் வாழ பெருமானின் பாதார விந்தங்களை பணிந்து எமது மனமார்ந்த நல்லாசிகளையும் தெரிவித்துக் கொள்வதில் மனமகிழ்ச்சியடைகின்றேன்.
சிவசிறி சிறிநிவாச நாகேந்திரக்குருக்கள்
பிரதிஸ்டா பிரதம குரு,
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி
சமேத அகிலாண்டேஸ்சுரர் திருக்கோவில்.
கோயில்குளம், வவுனியா, இலங்கை.

Saturday, July 5, 2008

மகாகும்பாபிசேகத்தில் 05-07-2007



































காலை 9மணிக்கு ஆச்சர்ய சந்தியனுஷ்டாணம்., துவஜபூசை, யாகபூசை (காலம்-4) பாவான அபிசேகம், ஸ்தாலிபாகம், வில்வஅஸ்டோத்திரஹோமம், பிரதக்சனம், தீபாராதனை, வேதஸ்தோத்திரதிருமுறைபாராயணம், நாதாஞ்சலி, நிர்த்தயாஞ்சலி, கீதாஞ்சலி, ஆசிர்வாதம், பிரசாதம் வழங்கல்.




பி.ப. 12.00 மணிக்கு தைலாப்பியங்கம் (எண்ணெய்க்காப்பு)-திங்கள் மாலை 5.00மணிவரை.




பி.ப.4 மணிக்கு பூதசுத்தி, துவஜபூசை, யாகபூசை, (காலம் 5) சிவகஸ்நாம ஹோமம், பிரதக்சனம், தீபாராதனை, வேதஸ்தோத்திரதிருமுறைபாராயணம், நாதாஞ்சலி, நிர்த்தயாஞ்சலி, கீதாஞ்சலி, ஆசிர்வாதம், பிரசாதம் வழங்கல்.

மகாகும்பாபிசேகம் 4-07-2008




























காலை 8.7 முதல் 9.27 வரை ஸ்தூபிஸ்தானம், தீபஸ்தாபனம், யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தனம், அகிலாண்டேஸ்வரி தெப்பக்குளத்தில் ஆச்சார்யர்கள் சந்தியனுஷடானம், துவஜபூசை, யாகசாலா பிரவேசம், பாவனா அபிசேகம், ஸ்தாலிபாகம் யாகபூசை(காலம்-2), ருத்திரதிரிசதி ஹோமம், பிரதஷ்ணம், தீபாரதனை, வேதஸ்தோத்திர திருமுறைப்பாராயணம், நாதாஞ்சலி, கீதாஞ்சலி, ஆசிர்வாதம், பிரசாதம் வழங்கல்.












பி.ப. 5.00 மணி பூதசுத்தி, துவஜபூசை, யாகசாலா பிரவேசம், யாகபூசை (காலம்-3) கைலாசநாத அஷ்டோத்திர ஹோமம் பிரதக்சணம், தீபாராதனை, வேதஸ்தோத்திர திருமுறைப்பாராயணம், நாதாஞ்சலி, கீதாஞ்சலி, ஆசிர்வாதம், பிரசாதம் வழங்கல்.

Friday, July 4, 2008

மகாகும்பாபிசேகத்தில் 3-7-2008

































































காலை 9.00 மணிக்குபுண்ணியாவாசனம்,குண்டமண்டல, வேதிகாஸ்தாபனம், மாத்தாண்டபூசை, சூர்யாக்கினி சங்கிரணம், கங்காபூசை, பி.ப 2.00 மணிதமுதல் பூமி பூசை மிருத்சங்கிரகரணம், (மண் எடுத்தல்), அங்குரார்ப்பணம் ஆச்சார்ய மூர்திகள் ரஷ்பந்தனம், துவஜாரோகணம், பிரசன்னாபிசேகம், பிரசன்ன பூசை, கடஸ்தாபனம், அதிகாரங்க கலாகர்ஷனம், அக்கினி காரிய உத்பவனம், யந்திரஹோமம்? தக்சணஹோமம், கும்பயாகசலா பிரவேசம், யாகபூசை(காலம் 1), 33 குண்ட அக்கினி விபஜனம், ஹோமம், தீபாராதனை, வேதஸ்தோத்திர திருமுறை பாராயணம், கீதாஞ்சலி ஆசீர்வாதம், பிரசாதம் வழங்கல்.