Sunday, August 31, 2008

கும்பாபிசேக இருவெட்டு வெளியீடு


வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் கடந்த 9-7-2008 அன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மண்டலாபிசேகம் நடைபெற்று 27-08-2008 அன்று சங்காபிசேகத்துடன் இனிதே நிறைவு பெற்றது.

இவ்நிகழ்வுகளின் சலனப்பட (video) தொகுப்பு இரு இருவட்டுக்களில் (DVD) வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சிவதத்துவ மலரும் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றைப் பெற விரும்புவோர் கீழ்கண்ட முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

செயலாளர், அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் ஆலயம், கோவில்குளம், வவுனியா, இலங்கை. தொ.பே. 0094-24-2222651, 2221685 மின்னஞ்சல் sivankovilvavuniya@gmail.com

Thursday, August 28, 2008

சிவன்கோவில் சங்காபிசேகம்

நிருத்தியாஞ்சலி

எமது ஆலயத்தின் மகாகும்பாபிசேகத்தை தொடர்ந்து நடைபெற்ற மண்டலாபிசேக நிறைவு நாளன்று நிருத்திய நிகேத மாணவர்களின் நிருத்தியாஞ்சலி நடைபெற்றது. அதன் நிழற்படங்களை பார்வையி்ட இங்கே கிளிக் செய்யுங்கள்.

நிருத்தியாஞ்சலி

Saturday, August 23, 2008

10008 சங்காபிஷேக விஞ்ஞாபனம்

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் ஆலய மண்டலபபூர்த்தி தின நவகுண்டபஷ மகாயாக தச ஸகஸ்ர (10008) சங்காபிசேக விஞ்ஞாபனம்.

நிகழும் சர்வாதாரி வருடம் ஆவனித்திங்கள் 9ம் நாள் (25-08-2008) திங்கட்கிழமை பத்தாயிரத்து எ ட்டு சங்காபிசேகம் அகிலாண்டேஸ்வரி அம்பிகைக்கு நவஹோத்தர சனஸ்ர (1009) சங்காபிசேகமும் நடைபெற திருவருள் கை கூடியுள்ளது. இந்த சங்காபிசேகத்தின் பலனா நாட்டில் சாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் மரலவேண்டும் அகிலங்களுக்கு எல்லாம் தலைவனான அகிலாண்டேஸ்வர பெருமானுடைய இந்த புண்ணிய நிகழ்விலே கலந்து கொண்டு லேக சேமம் பெறுவீர்களாக.