அன்புடையீர்!
எமது இலங்கை மணித்தீவின் ஆறாவது ஈஸ்வரத்தலமாகவும் இலங்கையின் இருதயம் போல் விளங்கும் வன்னித்தலைநகரின் கண்ணே வேண்டுவோர் வேண்டுவதைத் தந்தருள அன்னையுடன் அருள்பாலித்துக் கொண்டு இருக்கும் சிறி அகிலாண்டேசுரப் பெருமானுக்கு நிகழும் சர்வசித்து வருடம் மாசித் திங்கள் 23ம் நாள் (06-03-2008) வியாழக்கிழமை இரவு 06.00 மணிமுதல் அதிகாலை 6.00 மணிவரை அபிசேக ஆராதனைகளும் நான்கு கால பூசைகளும் அர்ச்சனைகளும் இடம்பெறும். அதிகாலை 5.30 மணியளவில் வசந்த மண்டப பூசையும், தீர்த்தோற்சவமும் நடைபெறுவதுடன், முழு இரவும் விசேட கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளது.